வெற்றிலைக்கேணி கடற்படை திடீர் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் (12.03.2024) ஒளி பாய்ச்சி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam