சிறைக்குள் முன்னாள் அமைச்சரின் சொகுசு வாழ்க்கை
வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை சந்திக்க மதுபானம் கொண்டு செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவர முயன்ற குற்றச்சாட்டில் சிறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிணையில் செல்ல அனுமதி
குளிர்பானப் போத்தலில் மதுபானத்தை நிரப்பி சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்ல சந்தேக நபர் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் தகவல்களை கருத்தில் கொண்டு, தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள 2 பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri