பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது
கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(22.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,பரந்தன் பகுதியில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வீதியால் மணல் ஏற்றி வந்த கனரக வாகனத்தை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது அதனை சோதனை செய்யாதிருக்க சாரதி இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார்.
கைது
இதனையடுத்து, இலஞ்சம் வழங்க முற்பட்ட கனரக வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இலஞ்ச பணம் 500 ரூபா மற்றும் கனரக வாகனம் என்பவற்றை கிளிநொச்சி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், குறித்த தடையப் பொருட்களை இன்றையதினம்(23.1.2026) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan