மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி
மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அஹங்கம பெலஸ்ஸ என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதில் சுவர் இடிந்து வீழ்ந்த போது அதில் சிக்குண்ட மூன்று பேரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
கட்டுமான தளமொன்றில் இவ்வாறு மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் கட்டுமான பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொஹகஹாஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.