சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்து செலுத்தியவர் கைது!
ஹட்டனில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(7.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஹட்டன் - டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை இயக்கி வந்துள்ளார் என்றும் மேலும் இடைநடுவில் பேருந்து சாரதியிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கு
மேலும் குறித்த பேருந்து ஹட்டன் - சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்டது எனவும் இதனால் பயணிகளின் நலன் கருதி விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு குறித்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் தெரிவித்தார்.

எனவே சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் தனியார் பேருந்து ஒன்றினை பிரதான வீதிகளில் இயக்கிய குற்றச்சாட்டிலும் , சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பேருந்து ஒன்றினை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பேருந்தின் உரிமையாளர் மீதும் ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை



புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam