இரவில் நடந்த சோதனை! விமான நிலையத்தில் அதிரடியாக கைதான இளைஞர்
இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
போதைப்பொருள் தடுப்பு பொலிஸ், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam