கைதி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம்: தீவிரமாகும் பிரச்சினை
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பத்து நாட்களுக்குப் பின், ஜனாதிபதி மன்னிப்பை பெற்றதாக கூறப்படும் தண்டனைக் கைதி குறித்து, ஜனாதிபதி அலுவலகமும் சிறைச்சாலைத் திணைக்களமும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில், அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கேள்வி எழுப்பப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித பி பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளியான அறிக்கைகள்
4 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, நிதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் விடுதலையை நியாயப்படுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், வெசாக் பூரணை தினத்தில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியலில், குறித்த கைதியின் பெயர் சேர்க்கப்படவில்லை என ஜனாதிபதியின் ஊடக அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, குற்றப்புலனாய்வுத்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மன்னிப்புப் பட்டியல்
இந்தநிலையில், முரண்பட்ட இந்த இரண்டு அறிக்கைகளும், தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அஜித் பி பெரோரா, இதன் மூலம், எந்தவொரு குற்றவாளியும் தனது பெயரை மன்னிப்புப் பட்டியலில் மோசடியாகச் சேர்ப்பதன் மூலம் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைத் திணைக்களம், மன்னிப்புக்கு தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை நீதி அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தாலும், நீதி அமைச்சகமும் ஜனாதிபதி அலுவலகமும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியலைப் பரிசீலித்திருக்க வேண்டும் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri