ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக கைதிகள் விடுதலை !
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நிதி மோசடி குற்றச்செயலுடன் தொடர்புடைய அதுல என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி சில கைதிகள் சட்டவிரோதமான முறையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமாமன முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
