கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் நபரொருவர் படுகாயம்
கினிகத்தேனை- பொலிபிட்டிய பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாகி ஒன்று வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(2.4.2026) இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த நபர் உடனடியாக நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்து விறகு தேடிக்கொண்டிருந்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் 63 வயது மதிக்கதக்கவர் எனவும் அவர் பொல்பிட்டிய பிட்டவல பகுதியை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam