மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு
கிளிநொச்சி- பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில்17 பொது மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டத்தினை நிறுத்துமாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் குறித்த நிள அளவையை எதிர்த்து பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனால் நேற்று(2.4.2026) காலை இராணுவ முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, காணி உரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
நில அளவீடு
அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி குறித்த அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கவணயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு