கிண்ணியாவில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்து அசௌகரியங்களுக்கு தீர்வு.. மகிழ்ச்சியில் மக்கள்!
கிண்ணியா நகரப் பகுதி ஊடாக நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்து அசௌகரியங்களுக்கு தீர்வு காணும் வகையில், திருகோணமலை - மூதூர் பேருந்து சேவைகளை புதிய பாதையினூடாக முன்னெடுப்பதற்கு கிண்ணியா நகர சபை தவிசாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கிண்ணியா நகர சபை தவிசாளர், சபை உறுப்பினர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
இதன்போது பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், உட்பகுதி கிராமங்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருகோணமலை - மூதூர் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் கிண்ணியா புகாரி சந்தி, குட்டிகராச் ஆலங்கேணி, பைசல் நகர் ஆகிய புதிய பாதையினூடாக பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள்..
ஒருங்கிணைக்கப்பட்ட சேவை இந்த புதிய நடைமுறையானது அரச போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்து பேருந்து சேவைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆலங்கேணி மற்றும் பைசல் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேரடியான மற்றும் இலகுவான போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
"பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இது கிண்ணியாவின் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்." கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி தெரிவித்தார்.
தவிசாளரின் இந்தத் துரித மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்த புதிய சேவையின் மூலம் அதிக நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், ஏப்ரல் 6 முதல் புதிய பயண அட்டவணை அமுலுக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri