24 மணிநேரத்தில் ஐந்து அதிரடி தாக்குதல்கள்! குறிவைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள்
ஈராக்கில் செயல்படும் ஆயுதக் குழுவான Saraya Awliya al-Dam கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஐந்து தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், Islamic Resistance in Iraq என்ற அமைப்புடன் தொடர்புடைய இந்தக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் ஈராகிற்குள் மற்றும் விரிவான பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு மொத்தம் 23 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.
ஐந்து தாக்குதல்கள்
இந்த தாக்குதல்களை மேற்கொள்ள பல டிரோன்கள் (drones) பயன்படுத்தப்பட்டதாகவும், டஜன் கணக்கில் டிரோன்கள் அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெல் அவிவ் மற்றும் ஈலாட் தளங்கள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதல்கள் மூலம் இஸ்ரேலியப் படைகளையும் இராணுவத் தொழில் நிறுவனங்களையும் "அழித்துவிட்டதாக" ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam