அக்கராயன் வைத்தியசாலையின் உணவு வழங்கல் விடயத்தில் முறைகேடு - பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
அக்கராயன் வைத்தியசாலைக்கான உணவு வழங்கல் ஒப்பந்தம் நிறைவுக் காலத்திற்கு முன்னர் நிறுத்தப்பட்டு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளதோடு, இது தொடர்பில் உயரதிகாரிகள் கவனம் செலுத்தி நியாயத்தைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் காலம் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், எவ்விதமான எழுத்து மூலமான அறிவித்தலும் இன்றி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நிறுத்தி முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அக்கராயன்குளம் வைத்தியசாலையின் நோயாளர்களுக்கும், பணியாளர்களுக்குமான சமைத்த உணவு வழங்கும் ஒப்பந்தம் கடந்த 2020.05.01 தொடக்கம் 2021.04.30 வரையான ஒரு வருடக் காலத்திற்கு இரண்டு இலட்சத்து 48 ஆயிரம் ரூபாவுக்கு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்தை பெற்ற காலத்திலிருந்து நேர்த்தியாக, நடைமுறைகளுக்கு அமைவாகச் சமைத்த உணவு வழங்கலை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், எவ்வித காரணங்களும் இன்றி கடந்த 2020.11.04 அன்று தாதிய உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக வாய்மொழி அறிவித்தல் மூலம் அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுக் குறித்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதற்கு ஆறு மாதங்கள் உள்ள போதும் முன்னதாக ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு இதுவரை எழுத்து மூலமான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே இது தொடர்பில் அக்கராயன்குளம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் ராகுலனை தொடர்பு கொண்டு வினவிய போது, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்றுநோய் வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டபோது இவரது ஒப்பந்தம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நிறுத்தப்பட்டது.
கிருஸ்ணபுரம் வைத்தியசாலைக்கான உணவு வழங்கலுக்கு எமது வைத்தியசாலையின் சமையலறை பயன்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்டமையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களிடம் பொறுப்பு வைத்திய அதிகாரி என்ற வகையில் நான் தொடர்பு கொண்டு என்னிடம் உத்தியோகப்பூர்வமாக யாரேனும் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்குள் ஏன் உணவு வழங்கல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது என வினவினால் எழுத்து மூலம் அறிவித்தல் எதுவும் இன்றி எவ்வாறு பதிலளிப்பது எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு
யாரேனும் வினவினால் தன்னிடம் அனுப்பிவிடுமாறு
தெரிவித்தார் என அக்கராயன் வைத்தியசாலையின் பொறுப்பு
வைத்திய அதிகாரி மருத்துவர் ராகுலன் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
