இலங்கையில் போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் குடும்பங்கள்
இலங்கயில் தற்போதைக்கு 16வீதமான குடும்பங்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பாக பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் கடுமையான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு இலங்கையில் நான்கில் ஒரு குடும்பம் போஷாக்கான உணவு இன்றி அல்லது போதுமான உணவு இன்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
போஷாக்கின்மை அதிகரிப்பு
பெரும்பாலான குடும்பங்களில் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவு குறைக்கப்பட்டுள்ளது., அல்லது உவின் அளவவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகள் கடுமையான போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



