வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட உள்ள கதவடைப்புக்கு பலர் ஆதரவு
வடக்கு, கிழக்கில் அதிகப்படியான இராணுவப்பிரசன்னத்தை குறைக்க வலியுறுத்தி எதிர்வரும்(18) ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். நாட்டில் உள்ள ஏனைய ஏழு மாகாணங்களை விட வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கிறது.
எனவே வடகிழக்கில் உள்ள இராணுவத்தை குறைத்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவில் பங்கிடப்படவேண்டும். எமது மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்கவேண்டும். தற்போதுகூட வவுனியா விமானப்படை முகாமுக்காக சகாயமாதா புரத்திற்கு பின்புறமுள்ள 8ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
ஆதரவு
ஆனால் அந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றுகூட இல்லை. இறம்பைக்குளம் கிராமத்தில் பொதுத்தேவைக்கான காணி இல்லை. அந்தபகுதியில் உள்ள மயானத்திற்கான நிலம் போதுமானதாக இல்லை. எனவே இப்படியான ஒரு நிலை இருக்கும் போது இந்த காணி சுவீகரிப்பை எப்படி அனுமதிக்க முடியும்.
எமது பகுதிகளில் கிராமங்களுக்கு ஒரு இராணுவ முகாம் ஒன்று கட்டாயம் இருக்கும் நிலை உள்ளது. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை.
எனவே இவ்வாறான நிலமைகள் மாற்றப்படவேண்டும் என வலியுறுத்தி நாம் இந்த கதவடைப்புக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள கதவடைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் , ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக குறித்த மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள கதவடைப்புக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக மலையகத்தின் முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறித்த கதவடைப்புக்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிரித்தானிய கிளை
வடக்கு–கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்காது என அறிவித்துள்ளது.
அத்தோடு, சிலரின் தனிப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகளை எங்கள் கிளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதவடைப்பு
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தருக்கு நீதி கோரி கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு முறையான நடைமுறை ஒழுங்குகளை பின்பற்றாமல் விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். கட்சியின் உட்புற ஆலோசனைகளையும், ஏனைய கட்சிகள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பொது அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் எதனுடனும் கலந்துரையாடாமல் தடுக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் நிலவுகின்ற தன்னிச்சையானதும், சர்வாதிகார போக்கையுமே காட்டுகின்றது.
மேலும், தங்களது தனிப்பட்ட அறிவிப்புக்கு ஆதரவைப் பெறும் நோக்கில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஊடகச் சந்திப்புகள் மற்றும் வர்த்தக சங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கட்டாயப்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எதிர்ப்பு
இது கட்சியின் கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அத்தோடு இன்றைய சூழலில் கதவடைப்பு போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எந்தவித அழுத்தத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தாது.
வடகிழக்குக்குள் தமிழர்கள் மேற்கொள்ளும் களவடைப்பானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களையும், அன்றாடத் தினக்கூலி தொழிலாளர்களையும், வணிக நிறுவனங்களையும் பாதிப்பதாகவே அமையும்.
எனவே, இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை வன்மையாகக் கண்டிக்கிறது. இனிமேல் இத்தகைய சர்வாதிகார செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதையும் எங்கள் கிளை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கதவடைப்புக்கு அழைப்பு
நாளை(18) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழர் தாயகமாக வடக்கு - கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இதை எதிர்த்து தமிழர் தாயகத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எமது தமிழர் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை திங்கட்கிழமை வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
போரதீவுபற்று
எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள கர்த்தாளுக்கு அனைவரையும் தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று(17) களுவாஞ்சிக்குடி நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு ஆதரவு வழங்கும் முகமாக எதிர்வரும் 18 ஆம் திகதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானத்து இருக்கின்றோம்.
ஆதரவு
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் முத்தையன்கட்டில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி கொண்டு வந்த இந்த வட கிழக்கில் பூரண கதவடைப்புக்கு எமது களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களும் பூரண அனுசரணையினை தந்தமைக்கு தவிசாளர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம் பெறக்கூடாது, தமிழர்களுக்கு எது மீது அநிதியும் இடம்பெறக்கூடாது இதுதான் கடைசியாக நடைபெற்ற தமிழரின் உயிரிழப்பாக இருக்க வேண்டும்.
ஏன் இந்த கதவடைப்பை அனுஷ்டிக்கிறோம் என்றால் எங்களுடைய நிலைமை அனைத்தும் சர்வதேச அளவுக்கு செல்ல வேண்டும். சர்வதேசம் உண்மையில் எங்களுக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும். புதிய அரசாங்கங்கள் வருகின்ற போது அரசாங்கங்கள் மாறுகின்றதே தவிர அவர்களது கொள்கைகள் இதுவரையில் மாறவில்லை அவர்கள் உண்மையில் சிங்கள கொள்கையில் இருந்து அவர்கள் இன்னமும் மாறவில்லை.
தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு அரசாங்கம் வரும்போதும் எங்களை பாரிய அளவு எதிரியாக நினைக்கின்ற சிங்கள கட்சிகள் அனைத்திற்கும் சரியாக பாடமாக இருக்க வேண்டும். 01. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தவிசாளர் மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கு சபை அமர்வுகளில் அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கு உடனடியாக என்னென்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டுமோ அனைத்து சட்ட நடவடிக்கையும் இன்றைய தினம் நான் எடுத்திருக்கின்றேன். எனக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வலய கல்வி அலுவலகத்திற்கு 15 மூடை உரம் கொடுத்ததாகவும், வெல்லாவெளி பிரதேச சபைக்கு 20 மூடை உரம் கொடுத்ததாகவும் இன்னும் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு மணல் விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் அனுமதி
உண்மையில் அந்த பிரதேச சபை உறுப்பினருக்கு தெளிவின்மை இல்லை என்பது எனக்கு தெரியும். அவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் இருந்து வந்தவர் களுதாவளையினை சேர்ந்தவர். அவருக்கு தெரியாது என நினைக்கின்றேன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் மாத்திரம் அல்ல இலங்கை பூராகவும் பிரதேச சபையின் நிதி கையாளல் ஒரு தவிசாளருக்கு இல்லை.
இந்த நிதி கையாளினை பிரதேச சபை செயலாளர் ஊடாக மாத்திரம் தான் நடைபெறுமே தவிர ஏனைய விடயங்கள் மாத்திரம் தான் எங்களுடைய பிரதேச சபை தவிசாளர் என்கின்ற ரீதியில் நான் கையால முடியும். ஒரு பிரதேச சபையின் ஊடாக இன்னும் ஒரு நிறுவனத்திற்கு உரம் அல்லது ஏதாவது ஒரு பொருளை கொடுக்கும்போது அது நிதி கையாளர்களை மேற்கொள்வது பிரதேச செயலாளரின் ஊடாகவே நடைபெறும் கட்டளை நான் விதித்தாலும் அந்த பணத்தை இன்னமும் மீள செலுத்தவில்லை என்றால் அது அரசை நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.
அதனை அரசு நிறுவனம் மீண்டும் கையாளும். தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் தனியார் அதனை செலுத்துவார். அதனை துரிதமாக எங்களுடைய பிரதேச சபை செயலாளர் ஊடாக அதற்கு பொறுப்பானவர்கள் ஊடாகத்தான் நாங்கள் அதனை கையாள வேண்டும். ஒரு அரச நிறுவனத்திற்கு மானியம் கொடுத்தது அது பிழை என்று எந்த இடத்திலும் இல்லை அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வது தான் எங்களுடைய கடமை இதில் பொய்யான தகவல்களே இப்போது வழங்கப்பட்டிருந்தது. அடுத்ததாக ஊடகவியலாளர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை என்று எங்களுடைய பிரேரணை வந்திருக்கின்றதே தவிர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று இதுவரை கூறவில்லை.
இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் புதிதாக வந்த உறுப்பினர்கள் பிரதேச சபையின் சட்ட திட்டங்கள் தெரியாதவர்கள் அவர்களுக்கு எடுத்தவுடன் ஜனாதிபதி என்கின்ற நினைப்பில் சில விடயங்களை கதைப்பது அதனை பிரதேச சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த விடாதே தாங்கள் த்ன்றோன்றித்தனமாக நடக்கின்ற போது பிரதேச சபையின் சட்ட திட்டங்கள் சரியான முறையில் நாங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தவிசாளரை எங்களுக்கு வழங்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவோம்.
அபிவிருத்தி
.இலங்கையில் அதிகூடிய அபிவிருத்தி இடம்பெறுகின்ற பிரதேச சபை எமது பிரதேச சபை அதிகளவான மின்குமில்களை கொள்வனவு செய்து மாற்றி இருக்கின்றோம். வீதிகள் அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது வடிகான் தொடர்பான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திண்மக்கழிவு முகாமைத்துவம் சரியான முறையில் இடம் பெற்று வருகின்றது. எமது மக்களுக்கு என்ன தேவையோ அனைத்தும் சரியான முறையில் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
2. ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளில் அனுமதிப்பது இல்லை என்கின்ற தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதா? உங்களுக்கு தெரியும் எங்களது பிரதேச சபையின் சட்ட திட்டங்கள் ஏதாவது ஒரு ஊடகவியலாளரோ அல்லது ஊடகமோ முன்கூட்டியே எங்களது சபை அமர்வுக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் எழுத்து மூல ஒரு ஆவணம் ஒன்றினை தர வேண்டும்.
அந்த எழுத்து மூல ஆவணங்களை நாங்கள் அந்த பிரதேச சபை கூட்டத் தொடரில் முன்மொழிந்து அதற்கு அவர்களுக்குரிய அனுமதியை வழங்குவதுதான் உண்மை. புதன்கிழமை எமது கூட்டத்தொடர் என்றால் அன்றைய தினமே வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் ஆனால் எங்களது இந்த அளவு கொண்டு செல்வது ஊடகவியலாளர்களே ஊடகம் இல்லாமல் இங்கு எதுவுமே இடம்பெறப் போவதில்லை.
ஊடக துறையினருக்கு எங்களது வேண்டுகோள் எங்களது கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் நாம் உங்களுக்கு அறிவிப்போம். யார் யார் கலந்து கொள்வது என்பது அதனை மேற்கொண்டு இம்முறை இடம்பெறும் கூட்டத்தொடருக்கு ஏக மனதாக தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு
வடக்கு கிழக்கின் தமிழர் தாயக பிரதேசங்களில் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றப்பட்டு எமது மக்களின் பாரம்பரிய வரலாற்று நிலங்கள் எமது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என 18.8.2025 ஏற்பாடாகி உள்ள முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை நாம் வழங்குகின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக் கட்சியின் செயலாளர் க. துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேண்டுமன்றே சில தரப்புகள் இதன் நதி மூலம் ரிசி மூலம் தேடி போராட்டங்களை குழப்பியடித்து இனத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அன்பான எமது உறவுகளே அதீத இராணுவ பிரசன்னம் இன்றுவரை எமது தாயக நிலங்களில் ஏற்படுத்தி வருகின்ற இடர்பாடுகளை சந்தித்து அவற்றின் இழப்பினை உணர்ந்து கொண்டவர்கள் நாங்கள். நல்லூர் திருவிழா நாட்களிலோ மடுத்திருவிழா நாட்கள் என்பதனாலோ சிங்கள இராணுவம் எம்மீது செல்தாக்குதலை நிறுத்துவதில்லை என்கின்ற வராலாற்று வலியை உங்களுக்கு நியாபகம் ஊட்ட விரும்புகிறேன்.
போராட்டம் வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து போராடும் மனவலிமையை தந்தவன் வழியில் போராடியவர்கள் நாங்கள். எமது மக்களின் எதிர்கால நலன்கள் கருதி தாயகத்தின் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றபட வேண்டி யார் அழைப்பினும் நாம் எமது ஜனநாக ஆதரவினை தொடர்ந்து வழங்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கதவடைப்புக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனி ஒரு அரசியல் கட்சியின் கதவடைப்பிற்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்க முடியாது.
கதவடைப்பிற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும்.
கற்றல் செயல்பாடு
அதன்பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் கதவடைப்பிற்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும். இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவுகோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்கு துணை போகவும் மாட்டோம்.
மேலும் பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
