மாலினி பொன்சேகாவின் அஞ்சலி நிகழ்வில் இடம்பெற்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்
இலங்கையின் பிரபல நடிகை மாலினி பொன்சேகா உயிரிழந்துள்ள நிலையில் நாட்டுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சக நடிகை ஒருவரின் செயற்பாடு பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
மாலினி பொன்சேகாவின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வைக்கப்பட்டது.
புகைப்படங்கள்
இதன்போது, அதிகளவான இரசிகர்கள், திரைப்பட துறையினர் என பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் குறித்த நடிகை படத்தில் நடிப்பதை போன்று பூதவுடலுக்கு அருகில் சென்று முகம் சுழிக்க வைக்கும் முறையில் நடந்து கொண்டுள்ளார்.
வழமையாக எவராக இருந்தாலும் இறுதிக் கிரியைகளுக்கு சென்றால் அனுதாபங்களை தெரிவிப்பார்கள்.ஆனால் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை, மறைந்த மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அருகில் சென்று புகைப்படங்கள் எடுத்து இழிவான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
அத்தோடு, மாலினி பொன்சேகாவின் பூதவுடன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மற்றுமொருவரை நிறுத்தி அவரிடம் சைகை காட்டி தன்னைப் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அருகில் இருந்து அஞ்சலி செலுத்தியவர்களை பின்னே செல்லுமாறு கூறி தன்னைப் புகைப்படம் எடுக்குமாறு தனக்கு முன்னால் இருந்தவரை பணித்துள்ளார்.
மாலினி பொன்சேகா
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், பலர் குறித்த நடிகையின் இந்த செயற்பாட்டிற்கு கடும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா கடந்த (24) ஆம் திகதி தனது 78 ஆவது வயதில் காலமானார்.
அத்தோடு, 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.
பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம், தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.
@lankasrinews மாலினி பொன்சேகாவின் அஞ்சலி நிகழ்வில் இடம்பெற்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்! #malinifonseka #tranding #news #srilankapolice #srilanka#latestnewsupdates #viral ♬ original sound - Lankasri News
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
