உகந்தை முருகன் ஆலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை.. தொடரும் சர்ச்சைகள்

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Hinduism
By H. A. Roshan May 28, 2025 12:43 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை -  முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை ஆராயும் விதமாக எமது ஊடகவியலாளர் உட்பட சக செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு சென்று குறித்த புத்தர் சிலை நிர்மாணம் குறித்து ஆராய்ந்துள்ளது.

நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புத்தர் சிலை

இதற்கமைய ஆலயத்தில் இருந்தவர்களிடம் பேசுகின்ற போது இந்த புத்தர் சிலை நிறுவுகின்ற விடயம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது.

போன்று 2023இல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் 2024இல் ஒரு புத்தர் சிலை இங்கே நிறுவப்பட்டது என்றும் கூறப்பட்டது. அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக இந்த புத்தர் சிலை பெரிய அளவிலே இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.


இந்த விடயம் தொடர்பில் நேரடியாக அங்கு சென்றவர்கள் அவதானித்து, அந்த இடத்தில் முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை தோணிமலை போன்றவைகளும் இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு மலையும் அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கின்றனர். 

இது உகந்தை ஆலய பிரதேசம் என்பது சைவத் தமிழர்களுடைய பூர்வீகமான ஒரு வரலாற்றிடம் இங்கு எவ்வாறு இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டது. யாரால் நிறுவப்பட்டது? ஏன் நிறுவப்பப்பட்டது? இதனுடைய பின்னணி என்ன? என்பதை பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் நாங்கள் அவதானித்த போது இந்த புத்தர் சிலை கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை தரித்த இருவரால் அந்த சிலையுள்ள மலை துப்பரவு செய்யப்பட்டதையும் காண முடிந்தது.

தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கு எதிராக திரும்பும் விசாரணை..! நீதிமன்றத்தின் முடிவு

தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கு எதிராக திரும்பும் விசாரணை..! நீதிமன்றத்தின் முடிவு

பொதுமக்களின் கோரிக்கை 

இந்த சிலை அவர்களுக்கு தெரியாமல் அங்கு வேறு யாரும் நிறுவியிருக்க முடியாது. இது அவர்களுடைய கடற்படை முகாமுடன் காணப்படும் மலை பிரதேசம் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டதோடு இது அவர்கள் வழிபடுவதற்காக நிறுவியிருக்கலாம் என்றொரு கருத்தும் அங்கு கூறப்பட்டது. 

உகந்தை முருகன் ஆலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை.. தொடரும் சர்ச்சைகள் | Buddha Statue Erected Near Ukanta Murugan Temple

அவ்வாறு கடற்படையினர் வணங்குவதாக இருந்தால் அதை அவர்களது முகாமினுள் வைத்திருக்கலாமே ஏன் அதை பொது வெளியில் அதுவும் உகந்தை முருகன் திருவம்பாவை காலத்தில் தீர்த்தமாடுகின்ற அந்த பிரதேசத்தில் நிறுவினார்கள் எனும் கேள்வியும் எழுப்பப்படுகிறது.

மேலும் உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது என்றும் இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்றும் அது யாரால் ஏன் அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்றைய தினம் ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினரும் வந்து தங்களிடம் இதை யார் புகைப்படம் எடுத்தது? யார் ஊடகங்களில் வெளியிட்டது என்று கேட்டிருந்தார்கள் என்றும் அங்கு சென்றவர்களால் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அந்த பொலிசாரையும் அப்பகுதியில் காண முடிந்தது. மேலும் அந்த இடத்தில் ஒரு அச்சமான பதட்டமான சூழலையும் நாங்கள் அவதானித்தோம் என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

உரிய நடவடிக்கை 

அதை தொடர்ந்து இந்த விடயங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்த பின்னர் நாங்கள் அங்கிருந்து வெளியாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, உகந்தை முருகன் ஆயத்தின் மலையில் வள்ளியம்மன் ஆலயத்தை அண்டியதாக அமைக்கப்படவிருந்த முருகன் சிலையினை அமைக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய வனஇலாகா மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஏன் இந்த புத்தர் சிலையினை நிறுத்தவில்லை என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுப்பப்படுகின்றது. 

உகந்தை முருகன் ஆலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை.. தொடரும் சர்ச்சைகள் | Buddha Statue Erected Near Ukanta Murugan Temple

எனவே, இதன் பின்னணி என்ன என்பதையும் இது தொடர்பான உண்மைகளையும் உரிய திணைக்களங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதோடு, இந்த சிலை நிறுவிய விடயம் சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் தங்களுடைய உரிமை மறுக்கப்பட்டு இன்னும் ஒரு சமூகத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற விடயத்தையும் பேசுபொருளாக்கி இருக்கிறது. 

ஆகையால், இந்த அரசாங்கம் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

இந்த சிலை பற்றிய விடயத்தை நாங்கள் பேசுகிறபோது சன்னியாசி மலையும் எங்களிடம் இருந்து பறிபோயிருக்கிறது அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது என அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியுள்ளார். 


இன்று முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம்: வெளியானது அறிவிப்பு

இன்று முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம்: வெளியானது அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கிளிநொச்சி, Toronto, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US