நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடினமான சூழ்நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், தனிப்பட்ட வருமானத்தைப் பார்த்தாலும், அதிகரித்த விலை நிலைகள் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக, 2021ஆம் ஆண்டுடன் 2024 ஆம் ஆண்டை ஒப்பிட்டால், வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது பணவீக்கம் குறைவதால் பொதுமக்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் 2021 உடன் ஒப்பிடும்போது, வாழ்க்கைச் செலவு பொதுமக்கள் உணரக்கூடிய அளவில் இருப்பதைக் காண்கிறோம். அரசு ஊழியர்களாக இருந்தாலும், தனியார் ஊழியர்களாக இருந்தாலும், அல்லது வணிகங்களின் வருமானமாக இருந்தாலும், அந்த வருமானத்தை அதிகரிக்க அதேபோன்று பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும்.
சம்பள உயர்வு
எதிர்காலத்தில் அந்த வகையான பொருளாதாரம் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். பொதுமக்களுக்கு இழந்த உண்மையான வருமானம் படிப்படியாக மீட்டெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சில நேரங்களில், குறிப்பாக அரச சேவையில், அவ்வப்போது சம்பள உயர்வுகளைக் காண்கிறோம்.
ஆனால் அவை உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள உயர்வுகள் அல்ல. எனவே, பொருளாதார வல்லுநர்களாகிய நாம் பார்ப்பது சம்பளம் அதிகரிக்கும் போது, அவை உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
