வரி எண் தொடர்பில் இறைவரி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வட்டி வருமானத்தின் மீது நிறுத்தி வைக்கும் வரிக்கு உட்பட்ட ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத தனிநபர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுய அறிவிப்புக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவ்வாறான எந்தவொரு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இறைவரி திணைக்களம்
தொடர்புடைய வைப்புத் தொகைகளுக்கு வட்டி செலுத்தல்களைப் பெறுவதற்கு முன்பு நிறுத்தி வைக்கும் வரி விலக்கு கோரும் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பை சமர்ப்பிக்க TIN என்ற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியமில்லை என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.