புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை தெரிவித்துள்ளது.
ஹஜ் பெருநாள்
நாட்டின் பல பிரதேசங்களிலும் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்தமைக்கமைய, இன்று 29ஆம் திகதி துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
அத்துடன் புனித அரபா தினம் துல் ஹஜ் 9ஆம் நாளான எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam