மீண்டும் இலங்கை அணியுடன் லசித் மலிங்க
டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
10ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
டி20 உலகக் கோப்பை
இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தசன் ஷனகா (அணித்தலைவர்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்கா. துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்சனா, துஷ்மந்த சமீரா, மதீஷ பதிரன, ஈஷான் மலிங்கா ஆகியோர் உலக கிண்ண அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி ஆலோசகர்
இந்தநிலையில், டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 8ஆம் திகதி அயர்லாந்துடனும், 12ஆம் திகதி ஓமனுடனும், 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனும், 19ஆம் திகதி ஜிம்பாப்வே உடனும் மோதுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.