பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்

Sri Lankan Peoples Law and Order Harshana Nanayakkara
By Shadhu Shanker Feb 03, 2026 09:53 AM GMT
Report

வாடகைச் சட்டத்தை ரத்து செய்வதும், குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதும் வாடகை வீடுகளை வழங்கும் தனிநபர்கள் அல்லது வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (3) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

சட்ட மசோதா

முன்வைக்கப்பட்டுள்ள சட்ட முன்மொழிவுகள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர், இரண்டு சட்ட மசோதாக்களும் நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்டது.

பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல் | Justice Minister Clarifies New Rent Laws Deadline

அவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் முன் தேவையான சட்ட மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றார்.

இந்த இரண்டு சட்ட மசோதாக்களும் 2025 செப்டம்பர் 18 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 2025 நவம்பர் 4 முதல் 2026 ஜனவரி 15 வரை பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக திறந்துவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஹரிணியின் புதிய அறிவிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஹரிணியின் புதிய அறிவிப்பு

 பொதுமக்களின் கருத்துகள்

இந்த காலப்பகுதியில், இந்த வரைவு சட்டங்கள் நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.

ஆரம்ப கட்ட ஆலோசனை காலத்தில் இரண்டு உத்தியோகபூர்வ கருத்துரைகளே கிடைத்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த சட்டங்கள் ரகசியமாக கொண்டு வரப்படவில்லை என்பதையும் வலியுறுத்தினார்.

பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல் | Justice Minister Clarifies New Rent Laws Deadline

“இது பின்வழியாக கொண்டு வரப்படும் சட்டமல்ல. இந்த நாட்டின் மக்களுக்காக சிறந்த சட்டத்தை கொண்டு வருவதே எங்களின் நோக்கம்,” என அவர் கூறியதுடன், அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்து பங்குதாரர்களும் கட்டுமானமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், 2026 ஜனவரி 29 திகதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இந்த முன்மொழியப்பட்ட சட்ட மசோதாக்கள் தொடர்பில் தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!

எழுத்துப்பூர்வ கருத்துரைகள்

பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் ஆலோசனை காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அது 2026 பிப்ரவரி 3 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல் | Justice Minister Clarifies New Rent Laws Deadline

எழுத்துப்பூர்வ கருத்துரைகள் கிடைத்த பின்னர், அவை நீதியமைச்சின் கூடுதல் செயலாளர் (சட்டம்) தலைமையிலான குழுவினால் ஆய்வு செய்யப்படும் என்றும், பரிந்துரைகள், கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தையும் பரிசீலித்த பின்னரே இறுதி சட்ட வடிவம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிற்கு ஏற்ற, சமநிலையான சட்ட கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் தாமதமின்றி தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக நீதியமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US