இந்தியாவிடம் கடன் நிவாரணம் கோரும் மாலைதீவு
மாலைதீவு ஜனாதிபதி மூயிஸ் இந்தியாவிடம் கடன் நிவாரணம் கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
மாலைதீவில் இருந்து இந்திய இராணுவ வீரா்கள் வெளியேற வேண்டும் என்று மாலைதீவு ஜனாதிபதி வலியுறுத்தியதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவின் பாதுகாப்பு
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலைதீவு ஊடகத்துக்கு ஜனாதிபதி மூயிஸ் அளித்த நேர்காணலில் “மாலைதீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரா்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் இராணுவம் மாலைதீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும். இதில் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை.
இதேவேளை, மாலைதீவின் நெருங்கிய நண்பராக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் எனவும் மாலைதீவு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி 400.9 மில்லியன் டொலா்களை இந்தியாவுக்குக் கடனாக மாலைதீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |