விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பொலிஸார்
கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர்.
வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம் காணாமல் போன மாலைதீவைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மாலைதீவு பொலிஸாரும் இது குறித்த விசாரணைகளில் தீவிரம் காட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அடங்கிய மாலைதீவு குழுவொன்று இலங்கை புறப்பட்டுள்ளது.
இரண்டு உடல்களும் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று அவ்ஹாம் நசீர் உடையது என உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள் விசாரணைகள் குறித்து தங்களிற்கு எந்த விபரமும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்களில் காயங்கள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மாலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாலைதீவு பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பான அமைப்புகளுடன் தொடர்புகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்(Photo)


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
