மல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்துக்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கண்டனம்
இலங்கையின் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் நமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல. அது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம். அதிலே பயங்கரவாதிகள் தான் கொல்லப்பட்டார்கள். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற கருத்திற்கே தமது கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.
கண்டனம்
இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் வபிதா வசந்தன் அடிகளார், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளீதரன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், குரல் அற்றோரின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளருமான இன்பநாயகம், தமிழர் மரவுரிமை பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட வடக்கு கிழக்கிலிருந்து பல்வேறு பொது அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
