வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்த ஆளுநர் விசேட திட்டம்

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Nagalingam Vedanayagam
By Thevanthan Jun 05, 2026 07:54 AM GMT
Report

வடக்கு மாகாண சபையின் வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவாக்கிக் கொள்ள முடியும் எனவும், எனவே வருவாய் ஈட்டக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் தமக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று(04.06.2026) இடம்பெற்றது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

இந்தக் கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களங்கள் மூலம் வரும் வருவாய்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் ஊடாக வருவாயைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்துவதில் சில சவால்கள் நிலவுகின்றன. சில இடங்களில் மாகாணத்துக்குச் சேரவேண்டிய வருவாய் இழக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த காலங்களில் தவறான நடைமுறையொன்று தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டிருந்தால், அது சரி என்ற அடிப்படையில் அதனையே தொடர்ந்தும் முன்னெடுக்க முனையக் கூடாது.

வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்த ஆளுநர் விசேட திட்டம் | Governor S Special Plan To Improve In North

அந்தத் தவறுகளைத் திருத்தி, சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதனூடாகவே மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும். குறிப்பாக, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) நிதியை மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பெற்றுக்கொள்வதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

வருமான மூலங்கள்

இதனைத் தொடர்ந்து, பிரதிப் பிரதம செயலாளர், மாகாணம் மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைக்கு எதிர்பார்க்கப்படும் வருவாய் தொடர்பில் விளக்கமளித்தார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை முறையாகக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மாகாண இறைவரித் திணைக்களத்தின் விளக்கமளிப்பின்போது, மாகாண சபைகள் நிரலின் கீழ் அறவிடப்படும் வருமான மூலங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்த ஆளுநர் விசேட திட்டம் | Governor S Special Plan To Improve In North

குறிப்பாக, உள்ளூர் மதுபானத் தவறணை வாடகை, நீதிமன்ற ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வைகள், கனிமப் பொருட்கள் மீதான வரிகள், அடகு பிடிப்போருக்கான கட்டணங்கள் மற்றும் வியாபாரப் பெயர் பதிவுக்கான கட்டணங்கள் ஆகியவற்றினூடாகக் கிடைக்கும் வருமானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மாகாணக் காணித் திணைக்களத்தினூடாகப் பெறப்படும் நீண்டகாலக் குத்தகை மற்றும் வருடாந்த அனுமதிப்பத்திர வருமானங்கள் குறித்தும் இதன்போது ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் நிலவும் தாமதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் மாகாணக் காணி ஆணையாளரால் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்களுக்கான விலைமதிப்பீட்டுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் சபைகளின் வருமானம் அதிகரிக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், குடிபுகு சான்றிதழ் பெறுவது அவசியமாக்கப்பட்டு வருவதால் வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதேவேளை, மாகாண சபையால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்களுக்கு அமைவான ஒழுங்குமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையால் ஏற்படும் வருமான இழப்புகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஏனைய திணைக்களங்களும் தங்களுக்கான புதிய வருமான மூலங்களை அடையாளங்காண்பது தொடர்பிலும், அவற்றை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தைக் கொண்டு விசாரணை! மறைக்கப்படுகிறதா உண்மை..

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தைக் கொண்டு விசாரணை! மறைக்கப்படுகிறதா உண்மை..

திணைக்களங்களின் வழமையான வருவாய் ஈட்டலுக்கு மேலதிகமாக, மாகாணத்துக்கான மேலதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுத் திட்டத்தை மேலும் விரிவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல் மற்றும் நிதி), மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

கொழும்பின் முக்கிய பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் முக்கிய பகுதிகளில் நீர்வெட்டு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US