லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதத்திற்கும் தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
விலை விபரம்
சர்வதேச எரிவாயு விலைகளின் உயர்வு மற்றும் நெருக்கடி இருந்தபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நிறுவனம் விலை திருத்தம் மேற்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
you may like this