கோட்டாபயவிற்கு எதிராக மலேசிய தமிழர்கள் போராட்டம்(Photo)
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.
தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன்னால் இவர்கள் அணிதிரண்டுள்ளனர்.
பினாங்கு மாநில துணை முதல்வர் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதி பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், கோட்டாபயவை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பியுள்ளனர்.
மலேசிய தமிழர்களின் கோரிக்கை
மலேசிய தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
சிங்கப்பூர் தூதரை சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோட்டாபயவை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
போர் குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை
போர் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் அணிதிரண்ட தமிழர்கள், கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்துமாறு போராட்டம் செய்துள்ளனர்.
இதன்போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனினால்
சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை கையளிக்கப்பட்டது.



புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 31 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
