தப்பி ஓடிய கோட்டாபய! ஆட்சியை பிடித்த ரணில்: கடுமையாக விமர்சித்த வெளிநாட்டு யுவதி(Video)
இலங்கை மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு நாடாளுமன்றமும்,அதன் உறுப்பினர்களும் யார் என international solidarity with the peoples movement in sri lanka அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் 100 வது நாள் நிறைவையொட்டி இந்தியா-புது டில்லியில் நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த பேராசிரியர் டாக்டர் மாயா ஜான் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“2020 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற மற்றும் சட்டபூர்வமான தன்மையை இழந்த ரணில் அரசியலமைப்பின் விதிகளை தவறாக உபயோகித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி ஆவது உங்களுக்கு ஒரு விளையாட்டாக இருக்கின்றதா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
இவ்வேளையில் நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நாட்டில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களே காரணம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13 பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் செய்தது என்ன? நாட்டை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி சென்று ஈமெயில் ஊடாக தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். எதனை மறைப்பதற்காக அவர் நாட்டை விட்டு தப்பி சென்றார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ஜனாதிபதி தனது பதவி,கடமை என்பவற்றிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இவ்வாறான தனித்துவமான சூழ்நிலையில் இந்த நாட்டின் நாடாளுமன்றம் தாமாக ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வோம் என முன்வந்துள்ளது.
இந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார் இலங்கையின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கு?
மக்களுக்கு வேண்டியது என்ன? மக்களுக்கு செவிகொடுங்கள், அவர்களிடம் நீளமான பல கேள்விகள் உள்ளன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை குறித்து பல கேள்விகள் அவர்களிடம் உள்ளன.
இவர்கள் முடிவு எடுக்கும் இந்த சர்வகட்சி அரசாங்கம் இன்னும் ஒரு சட்டவிரோதமான, ஊழல் நிறைந்த விடயமாகவே அமையும்.” என கூறியுள்ளார்.