மலேசியாவில் உயிரிழந்த தமிழ் இளைஞன்
மலேசியாவில் உயிரிழந்த மஸ்கெலியாவை சேர்ந்த தமிழ் இளைஞனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறுதி கிரிகைகள்
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விராசணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இளைனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில், இளைஞனின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ள சடலம் அவரின் சொந்த ஊரான மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam