மெட்ரோ பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து: சாரதி மீது பொலிஸார் கடும் நடவடிக்கை
அத்துருகிரிய நகரில் 170 பேருந்து நிலையம் முன்பாக மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்தின் சாரதி தற்கால பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(08.10.2026) இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து ஒன்று, மெட்ரோ பேருந்துடன் மோதியதைத் தொடர்ந்து, அத்துருகிரிய பொலிஸ் நிலைய மோட்டார் வாகன ஆய்வாளரின் மேற்பார்வையில், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணியிடை நீக்கம்
பேருந்து முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பரிந்துரைத்த மோட்டார் வாகன ஆய்வாளர், குறித்த பேருந்தின் சாரதிக்கு தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துருகிரிய - பெட்டா வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த இந்த தனியார் பேருந்து, அத்துருகிரிய பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்காக பிரதான சாலையைக் கடந்து பின்னோக்கிச் சென்ற போது, மிலேனியம் சிட்டி-பெட்டா வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதற்கமைய, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பெற்ற பின்னர், இன்று(10) கடுவெல நீதிமன்றத்தில் இதுகுறித்த விவரங்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு பேருந்து சாரதிகளுக்கும் போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த சோதனை அறிக்கைகளில் இரு சாரதிகளும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்