கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஷிரந்தி..
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கண் பரிசோதனைக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு ஷிரந்தி ராஜபக்சவை நேற்றையதினம் அழைத்துச் செல்ல தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்த முடிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.
இன்று பரிசோதனை
அத்துடன், நேற்றையதினம் ஷிரந்தி ராஜபக்ச சிறைச்சாலை மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச தனது கண்ணில் சத்திரசிகிக்சை மேற்கொள்ளப்பட்டது போன்று கண்ணை பாதுகாக்கும் ஒரு சிறு கவசகத்தினால் கண்களை மூடியிருந்தார்.
எனினும், இது பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் தனியார் வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து, அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் அதன் உண்மைத் தன்மை அம்பலமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan