சுபோதினி அறிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்துங்கள்..! அரசிடம் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட சுபோதினி அறிக்கையினை முழுமையாக நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(22.11.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுதே இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகந்தநேசன் புயல்நேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வுக்கான கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சுகவீன ஆசிரியர் விடுமுறை போராட்டத்திற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சுபோதினி அறிக்கை நடைமுறைப்படுத்தாது 2027 ஆம் ஆண்டுக்கான பாதுட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட புயல்நேசன், தற்போது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் நிதியை ஒதுக்குகின்ற போது ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வை அதிகரித்துள்ளது.
ஆனால் நாம் எதிர்பார்ப்பது சம்பள உயர்வு அல்ல சுபோதினி அறிக்கையின் ஊடாக சுட்டிக் காட்டப்பட்ட சம்பள முரண்பாடு அதனை தீர்க்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாக உள்ளது என்றார்.