10 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட மலாலா: வெளியான காரணம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒருவராவார்.
தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா
அவர் 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவர் கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.
கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் மலாலா உயிர் தப்பினார்.
தொடர்ந்து, மலாலாவின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவருக்கு பிரிட்டன் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. அன்று முதல் இன்று வரை அவர் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு
இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.
உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம்
இந்த நிலையில் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மலாலா இன்று (11.10.2022) கராச்சி சென்றுள்ளார்.
தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மலாலா பாகிஸ்தான் செல்வது இது இரண்டாவது முறை.
இந்தப் பயணம் குறித்து மலாலா வெளியிட்ட அறிவிப்பில்,
“பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இந்தப் பயணம் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
தலிபான்களால் மலாலா சுடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், மலாலா தற்போது பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
"ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும்போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும்” என்று எப்போது கூறும் மலாலாவின் இந்தப் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
வெள்ளத்தால் பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் உள்ளது. எட்டு மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் அவர்கள் இப்போது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் $28 பில்லியன் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மலாலாவின் சொந்த ஊரான மிங்கோராவில் வன்முறை அதிகரிப்பு தொடர்பாக அவரது முன்னாள் பள்ளி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட நிலையில் யூசுப்சாயின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)