கொழும்பில் மூடப்படவுள்ள பிரதான வீதிகள்
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவிற்காக சிறப்பு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 ஆம் திகதி வரை ஒத்திகைகள் நடைபெற உள்ளன.
குறித்த நாட்களில் காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கொழும்பில் வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள வீதிகள்
இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு: கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழைதல்
கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்
கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்
கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்
கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்
இந்த வீதிகள் ஒத்திகை இடம்பெறும் காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், தேவைக்கு ஏற்ப அந்த பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒத்திகையால் பாதிப்பு ஏற்படாத வகையில் வழியமைக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri