உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடாத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்தை அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மனு மீதான விசாரணை
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.
இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படாத இந்த உத்தரவு நாடாளுமன்ற சபாநாயகருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அண்மையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
