யாழ். பல்கலைக்கழகப் பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் : பொலிஸார் தீவிர விசாரணை
யாழ். பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருட்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன.
மிக அண்மைக் காலமாகக் குறுகிய காலத்தினுள் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள் கட்டுக்கட்டாகக் காணாமல் போனதை அறிந்து கொண்ட நிர்வாகம், இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்தே கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் உதவி
பராமரிப்புக் கிளையில் பணியாற்றும் அமைய ஊழியர்கள் சிலரே இந்தக் கையாடலில் ஈடுபட்டார்கள் என்று மேலதிகாரிகள் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு ஊழியர்கள் மீது குற்றத்தை சுமத்தி மூடி மறைக்க முயன்றுள்ளனர்.
எனினும் குறிப்பிட்ட ஊழியர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்
அதிகாரிகள் சிலரும் இக் கையாடலுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்
பின்னரே பொலிஸாரின் உதவி நாடப்பட்டதாகவும், பொலிஸார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
