அமெரிக்க இராணுவத்தில் பாரிய மாற்றங்களை செய்யவுள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் அந்நாட்டு இராணுவத்தில் பாரிய மாற்றங்களை செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த கால தொற்றுநோய்களின் போது கோவிட் தடுப்பூசிகளை மறுத்ததற்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான துருப்புக்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஆவதற்கு போதுமான வாக்குகளைப் பெற்ற பீட்டர் ஹெக்சேத் (Pete Hegseth), தனது முதல் முழு நாள் பணியில் பென்டகனுக்குள் புதிய மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பன்முகத்தன்மை
மேலும் அமெரிக்காவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்(DEI )எனப்படும் அமைப்மை இராணுவத்திலிருந்து நீக்குவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போது அமெரிக்க இராணுவத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
