மைத்திரியின் அதிரடி தீர்மானம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற தேசிய பேரவையில் இணைந்துக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கூட்டம்

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பிரேரணையின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட, அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தேசிய சபைக்கு நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் செப்டெம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் நாளை (29) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri