சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணக்கப்பாடு
சர்வகட்சி அரசில் இணையுமாறு எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கலாம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம்
அத்துடன்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கவுள்ளார்.
இதில் ஒரு கட்டமாக, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு வகிக்கக்கூடிய பொதுவான வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் அவர் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
முக்கிய கட்சிகளின் இணக்கப்பாடு
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
