சிஐடியிடம் சிக்கியிருந்த மைத்திரி! நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்க அதிகாரியுடன் மந்திராலோசனை நடத்திய முக்கியஸ்தர்
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடம் பல மணித்தியாலங்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களனத்தினரால் இன்றையதினம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில், அவர் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மைத்திரி வாக்குமூலம்
கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்ட்டர் தினத்தன்று இலங்கையில் பல்வேறு பாகங்களிலும் நடத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவர் யார் என்று எனக்குத் தெரியும் என அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு 7இல் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் மதிய உணவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடியுள்ளனர், அதன் பிறகு தூதர் முதலில் வெளியேறினார். பத்து நிமிடங்களின் பின்னர் சஜின் வாஸ் குணவர்தனவும் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினார் என்று குறித்த சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்கிய போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்த போதிலும், சஜின் வாஸ் குணவர்தன மாத்திரம் அங்கு வருகைத்தரவில்லை.
சஜின் வாஸ் குணவர்தன உணவகத்திலிருந்து வெளியேறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |