சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் தடைபட்ட போக்குவரத்து! சிரமத்தில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கான அனைத்து பிரதான வீதிகளும் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு வரும் பிரதான வீதியான பட்டிருப்பு-வெல்லாவெளி வீதி,மண்டூர்-வெல்லாவெளி வீதி,பாலையடிவட்டை-வெல்லாவெளி ஆகியவற்றின் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
போக்குவரத்துகள் தடை
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களான நவகிரி,உன்னிச்சை ஆகியவற்றின் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துவருவதன் காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்றின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம்,பிரதேசசபை ஆகியவற்றிக்கும் ஏனைய அலுவலகங்களுக்கும் கடமைக்கு செல்வோரும் வேறு தேவைக்கு செல்வோரும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரமங்கள்
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை இணைந்து பட்டிருப்பு-வெல்லாவெளி வீதியில் உழவு இயந்திரத்தில் மக்களை போக்குவரத்துக்கு செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதனால் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதுடன் பல இடங்களில் மக்கள் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதியின் போக்குவரத்துகளுக்காக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் கயசீலன் மற்றும் உறுப்பினர் கோபிநாத் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று வெள்ள நிலைமைகளை பார்வையிட்டனர்.













சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam