கிழக்கின் தேசிய பாடசாலைகள் கையளிக்கும் பிரதான நிகழ்வு (Photos)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) "சௌபாக்கிய தெக்ம" வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் (Anuradha Yagambath) தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இன்று (07) மஹதிவுல்வெவ சிங்கள தேசிய பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் கல்வியின் உண்மையான சுதந்திரத்துக்காக தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 71 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல , திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரல மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்
என்.புள்ளநாயகம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பத்தி, பிரதேச சபை தவிசாளர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




