அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான நபர் கைது!
அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை நகரில் இன்று (23) 40 கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை விசேட சோதனை நடவடிக்கையின் போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி அசேல கே.ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri