நல்லூர் ஆலய வளாகத்தின் சர்ச்சைக்குரிய உணவகத்தின் திடீர் முடிவு..!
நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகம், மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சைவ உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் தலத்துக்கு அருகில் அசைவ உணவகம் அமைக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறித்த அசைவ உணவகம் அமைக்கும் நடவடிக்கை மதச்சாந்தி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அகற்றப்பட்ட விளம்பரப்பலகை
அத்துடன், இது தொடர்பில் தமிழ்ச் சைவ பேரவையின் அழைப்பின் பெயரில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது.
மேலும் எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியிலும் இது தொடர்பிலான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை நேற்றையதினம்(22) யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
