மகிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு(Mahindananda Aluthgamage) எதிரான வழக்கு ஒன்றின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மகிந்தானந்த 27 மில்லியன் செலவிட்டு கொழும்பு கிங்ஸி வீதியில் அதி சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்திருந்தார்.
இவ்வாறு வீடு கொள்வனவு செய்தன் மூலம் நிதிச் சலவைக் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்கின் தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |