மேலதிக வகுப்பு ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பொலிஸாரால் கைது
முன்னாள் மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல (Upul Shantha Sannasgala) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கந்தானை (Kandanai) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவகையில், நுவன் பிரதீப் எனும் நபர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உபுல் சாந்த சன்னஸ்கலவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு தான் பத்து லட்சம் ரூபாவை வைப்பிட்டதாகவும், குறித்த பணம் தனக்கு திருப்பித் தரப்படவில்லை என்றும் அவர் யூடியூப் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கந்தானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் அவர் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சன்னஸ்கல இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெலிசர நீதிமன்றத்தில் முன்னிலை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(மேலதிக தகவல் - Anadhi)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
