பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
களைநாசினி பயன்பாடு மற்றும் விற்பனை செய்தலைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமை தொடர்பில் பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த களைநாசினி வகைகள் ஐந்திற்கான தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பீடை கொல்லிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்றைய தினம் (22) பீடைக் கொல்லி பதிவாளர், பேராசிரியர் ஜே.ஏ சுமித் (J.A. Sumit) இரத்து செய்த காரணத்திற்காகவே இவ்வாறு அவர் மீது ஒழுக்காற்று நடைவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன களைநாசினிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு தாம் பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan