சஜித் பிரேமதாச வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: மகிந்தானந்த அளுத்கமகே
தான் பதவி விலகுவதாக வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய கலாசார நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் பதவி விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.12.2023) அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி விலகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் அதைச் செய்வாரா என்பதை தாம் அறிய விரும்புவதாக அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, மத்திய கலாசார நிதி, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam