மகிந்த கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றம் சென்றமைக்கான காரணம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து வருகைத்தந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து மகிந்த உள்ளிட்ட குழுவினர் கறுப்பு பட்டி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியினரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து இன்று தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி அரச ஆதரவாளர்களுக்கும் அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வன்முறையின் போது, அமரகீர்த்தி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.